Vision

வல்லமையின் தொனி இணைய வானொலியின் தரிசனம்

1.எல்லோரும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்ள வேண்டும்.

ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். II பேதுரு 3:9

2. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை அறிந்த எல்லோரும் சத்தியத்தை அறிகிற அறிவில் வளரவேண்டும்.

எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். I தீமோத்தேயு 2:4

3. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை அறிந்த ஜனங்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை விட்டு பின்மாற்ற நிலையில் இருப்பார்களாய் இருந்தால் மீண்டும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவண்டை சேர்க்கப்பட வேண்டும் .

அப்படியே, நீதிமான் தன் நீதியை விட்டுத் திரும்பி, நீதிகேடு செய்யும்போதும், நான் அவன்முன் இடறலை வைக்கும்போதும், அவன் சாவான்; நீ அவனை எச்சரிக்காதபடியினாலே அவன் தன் பாவத்திலே சாவான்; அவன் செய்த நீதிகள் நினைக்கப்படுவதில்லை; அவனுடைய இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்.  எசேக்கியேல் 3:20

மேலே எழுதப்பட்டிருக்கிற மூன்று பகுதிகளுக்கும் தேவையான ஆவிக்குரிய ஆலோசனைகள்:
தேவசெய்திகள் மூலம் பாடல்கள் மூலம் மற்றும் பல நிகழ்சிகள் மூலம் கற்பிக்கப்பட்டு கிறிஸ்துஇயேசுவுக்குள் ஜெயம் உள்ள வாழ்க்கைவாழவும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தமுள்ளவர்களாயிருக்கவும் வழிநடத்தப்படுவீர்கள் .கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக .
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வருகை அதிசீக்கிரமாயிருக்கிறது.

 ஆமென்!